• Home
  • News And Media

| உர தட்டுப்பாட்டை போக்க வேளாண்துறை அமைச்சர் ஆலோசனை

வில்லியனூர், மார்ச்.28புதுவை மாநிலத்தில் விவசாயத்துக்கு அடி உரமாக பயன் படுத்தப்படும் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க | முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆலோசனை | நடத்தினார். அப்போது டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக ராக் பாஸ்பேட் உரத்தைதங்குதடையின்றி விவசாயிகளுக்கு வழங்கிடசில்வர் லைன் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு, தடை யின்றி உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரவீந்திரன் சாமி நாதன் உறுதி கூறினார். இதில் வேளாண் துறை துணை இயக்குனர் வசந்தகுமார், மற்றும் பாசிக் மேலாண் இயக்குனர் சிவசண்முகம், சில்வர் லைன் மண்டல மேலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

| இயற்கை உரம் விற்பனை வில்லியனுாரில் துவக்கம்

வில்லியனுார், மே 7- வில்லியனுார் அடுத்த அரசூர் கிராமத்தில் உள்ள பாசிக் மையத்தில், சில்வர்லைன் பெர்டிலை சர்ஸ் நிறுவனம் சார்பில், இயற்கை உரம் விற்பனை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமைதாங்கி, விற்பனை மையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், பாசிக் நிறுவன மேலாண் இயக்குனர் சிவ சண்முகம், சில்வர்லைன் நிறுவன மேலாண் இயக்குனர் ரவீந்திரன் சுவாமிதாசன், துணை பொது மேலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

| புதுச்சேரியில் இயற்கை உரங்களை அமைச்சர் தேனி.ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்

புதுச்சேரி வேளாண்துறை சார்பில் ராக் பாஸ்பேட் என்ற உரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசூர் நாசிக் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்க சிறப்பு அழைப்பாளராக வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் ,குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து புதுச்சேரி வேளாண் துறை இயக்குனர் வசந்த குமார் கூறும்போது.புதுச்சேரி அரசசூர் பேசிக் குடோனில் மொத்த உர விற்பனையை தொடங்கப்பட்டுள்ளது. ராக் பாஸ்பேட் என்ற இயற்க்கை உரம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்த உரம் ஒரு மூட்டை 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும்,இயற்கையான உரம் என்பதால் மண்புழு போன்ற போன்றவற்றிற்கு இது எந்தவித பாதிப் பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்த வேளாண் துறை இயக்குனர் நெல் ,கரும்பு,வாழை காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு அடி உரமாக பயன்படுத்தும் பொழுது விவசாயிகளுக்கு செலவு மிச்சமாகும் என்றும் இதனால் 15 லிருந்து 20 சதவீதம் அதிக மகசூல் பெறலாம் என்றும் தெரிவித்தார். இதனை விவசாயிகள் பெற்று பயனடைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

19-May-2021
03-Aug-2021
06-May-2022
31-May-2022
22-Aug-2022
27-Aug-2022
03-Sep-2022
03-Sep-2022-II
04-Sep-2022
11-Sep-2022
27-Sep-2022
28-Sep-2022
29-Sep-2022
01-Oct-2022
11-Oct-2022
19-Oct-2022
20-Oct-2022
26-Oct-2022
28-Oct-2022
01-Nov-2022

Address

  SILVERLINE FERTILISERS PVT LTD
Head Office:

19, 2nd Floor, Jupiter Complex, Jupiter Complex, Dr Ranga Road, Mylapore, Chennai, TN - 600004

  Monday-Saturday: 9.00 AM - 6.00 PM

  Sunday: CLOSED